தமிழ்நாடு

tamil nadu

ஜல்லிக்கட்டு போட்டி

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மறுப்பு - ஊர் மக்கள் போராடி மீண்டும் கிடைத்த அனுமதி!

By

Published : May 11, 2023, 4:54 PM IST

Published : May 11, 2023, 4:54 PM IST

திண்டுக்கல்மாவட்டம் நத்தம் அய்யாபட்டியில் நாளை ( மே 12 ) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு மைதானம் அருகே தண்ணீர் தேங்கிருப்பதாகக் கூறி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

தொடர்ந்து இன்று (மே 11) காலை அய்யாபட்டியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நத்தம் ரவுண்டானா அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியலின்போது பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. 

இறுதியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார், தாசில்தார் சுகந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் நாளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படுகிறது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், சிறிது நேரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க:Cyber Crime: இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்.. எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details