குண்டும் குழியுமான தெருவில் நாற்று நட்டு நூதன போராட்டம்! - thurinjapuram
திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த அந்தனூர் ஊராட்சியில் துரிஞ்சாபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள தெருக்கள் மோசமான நிலையில் உள்ளது எனவும், எனவே பொதுமக்கள் சென்று வர பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
இருப்பினும், இது தொடர்பாக இது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். மேலும், கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தெருக்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.
இதனால் தெருக்கள் சேறும் சகதியுமாக மோசமான நிலையில் காணப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த அப்ப்குதி பெண்கள், தொடர்ந்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் தெருக்களில் உள்ள மழை நீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் போர்க் கால அடிப்படையில் விரைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டு சிமெண்ட் சாலை அமைத்திட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.