தரமில்லாத சாலை.. கைகளால் பெயர்த்தெடுத்த மக்கள்! அதிகாரிகள் 20% கமிஷன் வாங்குவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு! - Avalnaickenpatti
Published : Nov 6, 2023, 9:45 AM IST
|Updated : Nov 6, 2023, 10:32 AM IST
திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை போடப்பட்டு உள்ளது. இந்த தார் சாலை 25 இன்ச் அளவில் போடப்பட வேண்டும், ஆனால் இங்கு 10 இன்ச்க்கும் குறைவாக போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த தார் சலையை கைகளாலேயே பெயர்த்தெடுக்கும் அளவிற்கு தரமற்று உள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த தார் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தனர், அப்போது திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேள்வி எழுப்பினார், அவரிடமும் அங்கிருந்தவர்கள் கவுன்சிலரிடமும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, தனக்கு "ஒரு மணி நேரம் தங்களுக்கு தாருங்கள் ஒரு கிலோ மீட்டர் அளவில் போடப்பட்ட இந்த தார் சாலையை கைகளையே எடுத்து விடுகிறேன் என அந்த நபர் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் தரம் இல்லாதா சாலையை போட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.