Video:மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச்செல்லும் விநோத வழிபாடு
கோவை மாவட்டம், அன்னூர் இந்திரா நகர்ப்பகுதியில் பழமையான 'அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோயிலில்' திருவிழாவையொட்டி, கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து, மேளதாளங்கள் முழங்க அன்னூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். பன்றி ஊர்வலத்தை 'கொம்பன் ஊர்வலம்' என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோயிலில் பலியிட்டு, கடவுளர்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST