தொடர் விடுமுறை: பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்!
Published : Dec 24, 2023, 7:22 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் முன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று (டிச.24) கார்த்திகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அரையாண்டு தேர்வு விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.
மின் இழுவை ரயில் நிலையம், ரோப் கார் நிலையத்தில் இரண்டும் மணி நேரம் வரையும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும், மலைக் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் செய்ய முன்று மணி நேரம் வரையும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும், பக்தர்களின் கூட்டத்தை கட்டுபடுத்தும் விதமாக குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மலைக்கு நடந்து செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வர கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருத்திகை தினம் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்திட ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.