Pakistan Vs Afghanistan : சென்னை வந்த பாகிஸ்தான் வீரர்கள்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! - World Cup Cricket 2023
Published : Oct 21, 2023, 9:49 PM IST
சென்னை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் அணி சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமான மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். விமான நிலையத்தில் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சொகுசு பேருந்து மூலம் தனியார் ஓட்டலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடமும், ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடமும் தோல்வியை தழுவியதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இரு அணிகளும் உள்ளன.