ஶ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருப்பத்தூர் மாவட்டம் கோட்டை தெரு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியானது இன்று (ஜன.2) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், மகாதீபாராதனைகள் நடந்தன.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST