தமிழ்நாடு

tamil nadu

ரெட் ஜெயன்ட் குறித்த கேள்விக்கு டென்ஷனான தயாரிப்பாளர் முரளி ராமசாமி

ETV Bharat / videos

ரெட் ஜெயன்ட் குறித்த கேள்விக்கு டென்ஷனான தயாரிப்பாளர் முரளி ராமசாமி - Red Giant

By

Published : Apr 30, 2023, 4:14 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமான சங்கமான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர், இரண்டு செயலாளர், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், செயலாளர் மன்னனும் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர் பதவிக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி சேகரன், ராஜேஷ்வரி வேந்தன், தமிழ்குமரன், விடியல் ராஜூ போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன் போட்டியிடுகிறார்கள்.

இணைச்செயலாளர் பதவிக்கு டேவிட் ராஜ், இசக்கி ராஜா, ஜெமினி ராகவா, மணிகண்டன், சவுந்தர பாண்டியன் நிற்கிறார்கள். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின், கணேஷ், ரவீந்தர் சந்திரசேகரன், சிங்காரவேலன் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர 26 பேர் கொண்ட பொதுக்குழுவிற்கு நடிகை தேவயானி உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள்.

காலை முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் சசிகுமார், பிரகாஷ் ராஜ், தேவயானி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். இதுவரை நடிகர் ரஜினி, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, லைகா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜிகேஎம் தமிழ்குமரன், மன்சூர் அலிகான், பா.விஜய், தேவயானி மற்றும் பல திரைப்படத் தயாரிப்பாளர்களும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தலைவர் வேட்பாளரும், தயாரிப்பளர் சங்க தற்போதைய தலைவருமான தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரெட் ஜெயன்ட் குறித்த கேள்விக்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். யாரும் யாரையும் செய்யக் கூடாது எனத் தடுக்க முடியாது. தேர்தல் குறித்து மட்டும் கேள்வி கேளுங்கள்” என முரளி ராமசாமி கோபமாகப் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details