திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் சென்ற புதுமணத் தம்பதி - bullock cart
ஈரோடு திண்டல் சக்திநகரைச் சேர்ந்த மருத்துவர் நிசாந்த் பாலாஜிக்கும், வெட்டுக்காட்டு வலசைச் சேர்ந்த பெஷன் டிசைனர் ரித்துக்கும் மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (மார்ச் 27) திருமணம் நடைபெற்றது. புதுமணப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.
மணவிழா முடிந்த பின், மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் நிகழ்வில் மணப்பெண்ணை மாட்டு வண்டியில் நிசாந்த் பாலாஜி அழைத்துச்சென்றார். மாட்டு வண்டியை மணக்கோலத்தில் இருவரும் ஓட்டி சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். திருமண நாளில் மாட்டு வண்டி பயணம் புதுவித அனுபவமாக இருந்ததாக புதுமணத் தம்பதியினர் தெரிவித்தனர்.
இதேபோல், கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று எஸ்.பாரதி - வி.ஸ்ரீஜா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதிகள் இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் தாம்பூலத் தட்டுக்குப் பதிலாக, சிறுதானிய லட்டுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க:தாம்பூலப் பைக்கு பதில் சிறுதானிய லட்டுகள்.. கோவையை திரும்பிப் பார்க்க வைத்த தம்பதி!