தமிழ்நாடு

tamil nadu

நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்

ETV Bharat / videos

“லியோ” படம் வெற்றி பெற வேண்டி தங்கத்தேர் இழுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்! - Vijay makkal iyakkam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:23 AM IST

நாமக்கல்: நடிகர் விஜய் நடிக்கும் லியோ படம் வெற்றி பெற வேண்டி நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், விஜய் மக்கள் இயக்கத்தினர் நேற்று (அக்.12) தங்கத் தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், ‘லியோ.’ இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில், நாமக்கல்லில் உள்ள 18 அடி கொண்ட புகழ் பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடிகர் விஜய் படம் வைத்து மாவட்ட இளைஞரணி சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில், ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுத்து வலம் வந்தனர். மேலும், இந்நிகழ்வில் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details