தமிழ்நாடு

tamil nadu

மயிலையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

ETV Bharat / videos

Bakrid: மயிலாடுதுறையில் செல்பி எடுத்து பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்த இஸ்லாமியர்கள் - Needur

By

Published : Jun 29, 2023, 10:12 AM IST

பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ் மாதம் 10ஆம் நாள் பக்ரீத் கொண்டாடப்படுகின்றது. 

அந்த வகையில், மயிலாடுதுறையை அடுத்து உள்ள சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் அஸ்ரப் அலி தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமின் முன்னிலையில் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தனர். 

இந்தத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு‌ வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழ தொழுகை நடத்தினர். பின்னர், தொழுகை முடிந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செல்போனில் செல்பி எடுத்தும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

இதேபோல் வடகரை, அரங்கக்குடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், நீடூர், கிளியனூர், எலந்தங்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details