எந்த பணிப்பொறுப்பிற்கு வந்தாலும் அதில் ஒரு கடமை உணர்வை ஏற்படுத்த வேண்டும் - கல்யாணசுந்தரம் எம்.பி. உரை! - Member of Parliament Rajya Sabha
தஞ்சாவூர்:இன்றைய கல்லூரி மாணவ மாணவியர்கள் நாளை முதலமைச்சர்களாகவோ, உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவோ இன்னும் எண்ணற்ற உயர்பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் வரலாம். எந்த பணிப்பொறுப்பிற்கு வந்தாலும், அதில் ஒரு கடமை உணர்வை ஏற்படுத்திக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்று கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
கும்பகோணம் அருகேயுள்ள கள்ளபுலியூரில் தனியார் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி சார்பில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் ஜெயகுமாரி (கல்வியியல் கல்லூரி) ,கருணாநிதி (கலைக்கல்லூரி) ஆகியோர் முன்னிலை வகிக்க, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து விழாவினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய அவர், “இன்றைய கல்லூரி மாணவ மாணவியர்கள் நாளை முதலமைச்சர்களாகவோ, உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவோ இன்னும் எண்ணற்ற உயர்பதவிகளுக்கும், பொறுப்புகளுக்கும் வரலாம், எந்தப் பணிக்கு பொறுப்பிற்கு வந்தாலும், அதில் ஒரு கடமை உணர்வை ஏற்படுத்திக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்றும், மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை கனிவோடு அணுகி, செவிமடுத்து முழுமையாக அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அவற்றுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்” என்றும் திரு.எஸ்.கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளைப் பெற்றனர். தொடர்ந்து மாணவ மாணவியர்களின் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் மாலினி விஜயகுமார், அறங்காவலர் விக்னேஷ் வி குமார், கல்லூரி பேராசிரிய பெருமக்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 78,706 பேர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. "அஞ்ச வேண்டாம் துணைத் தேர்வு இருக்கு"