தமிழ்நாடு

tamil nadu

கச்சத்தீவு குறித்து முன்னாள் எம்.பி.கருத்து

ETV Bharat / videos

கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர முடிவு வேண்டும் - இலங்கை முன்னாள் எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் - மீண்டும் இந்தியாவில் இனைக்கப்படுமா கச்சத்தீவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 10:59 PM IST

இலங்கை: கச்சதீவு இலங்கையிடம் இருக்கிறதா அல்லது இந்தியாவிற்கு கொடுப்பதா என்று இரண்டு நாடுகளும் தெளிவாக ஆராய வேண்டும் என தமிழீழ விடுதலை கழகத்தின் தலைவரும், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் வீட்டில் இன்று (செப்.03) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

சமீபத்தில் தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் கச்சதீவை மீட்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என்று இலங்கை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "கச்சத்தீவை ஆரம்ப காலங்களில் இந்தியா வைத்திருந்ததாகவும், பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாகவும் பல உண்மைகளும், கதைகளும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது ஒவ்வொரு முறையும் இலங்கை இந்தியாவிற்கு கொடுப்பதும், இந்தியா இலங்கைக்கு கொடுப்பதுமாக இல்லாமல், ஒரு நிரந்தரமான சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்" என தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் எம்.பி தர்மலிங்கம் சித்தார்த்தனின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்கள் கடந்து பொதுமக்களிடையும் தற்போது பேசு பொருளாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details