Walajah Palar River: வாலாஜா பாலாறு அணைக்கட்டில் இருந்து 1,350 கன அடி நீர் வெளியேற்றம்! - வாலாஜா பாலாறு அணை
Published : Sep 29, 2023, 10:38 AM IST
ராணிப்பேட்டை: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், ஆந்திர மற்றும் வேலூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால், ராணிப்பேட்டை மாவட்ட உள்ள பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயித்துக்கு நீர் பாசனத்துக்காக, வாலாஜாவில் உள்ள பாலாறு அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு சுமார் 1,350 கன அடி நீர் ஏரிகளுக்கு திருப்பி விடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மகேந்திரவாடி ஏரிக்கு (கன அடியில்) 268, காவேரிப்பாக்கத்துக்கு 280, சக்கரமல்லூர் 110 மற்றும் தூசி ஏரிக்கு 692 கன என மொத்தம் 1,350 கன அடி நீர் ஏரிகளுக்கு திருப்பி விடும்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்தால் கூடுதல் கன அடி நீர், மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.