வீதியில் சென்றவர்களை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு! - elephant news
திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இந்த கிராமத்தைச் சுற்றி கருவேலமரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது.
அந்த பகுதியில், மூன்று சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, மூவரும் சேர்ந்து பெரிய தேன் கூட்டின் மீது விளையாட்டாகக் கல் எறிந்துள்ளனர். இதனால், கூட்டிலிருந்து வெளியேறிய ராட்சத தேனீக்கள் கிராமம் முழுவதும் சுற்றி தெருக்களில் நடந்துச் சென்றவர்களைக் கொட்டியது.
இதில், வாசுதேவன், ராதா, தேவகுமார், சூர்யா அன்னை மரியா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் மயக்கமடையும் நிலைக்கு ஆளாகினர். பின்னர் அவர்களை மீட்ட பொதுமக்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிலருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக குள்ளரபாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பொதுமக்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:முரசொலி அலுவலக வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்