தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் ராணுவ வீரரின் பைக்கில் இருந்த பணம் கொள்ளை

ETV Bharat / videos

முன்னாள் ராணுவ வீரரின் பைக்கில் இருந்த ரூ.1.50 லட்சம் கொள்ளை.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - ராணுவ வீரரின் ரூ1 50 லட்சம் கொள்ளை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 12:04 PM IST

வேலூர்: குடியாத்தம் அடுத்த செதுக்கரை விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன் (61). முன்னாள் ராணுவ வீரரான இவர், நேற்று குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியில் இருந்து ரூ.1.50 லட்சம் பணம் எடுத்துக் கொண்டு வந்துள்ளார். 

பின்னர், அந்த பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, குடியாத்தம் காட்பாடி ரோடு நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்று மருந்து வாங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு சென்றதும், இருசக்கர வாகனத்தை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் காணாமல் போனதைப் பார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட போலீசார் சென்று, குடியாத்தம் காட்பாடி ரோடு 4 முனை சந்திப்பு பகுதியில் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.  

அப்போது, குபேந்திரனை பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், அவர் மருந்து கடைக்குச் சென்ற நேரத்தில் பணத்தை திருடி சென்றது தெரிய வந்துள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து, இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ABOUT THE AUTHOR

...view details