தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

Miss Koovagam 2023: முதல் இரண்டு இடங்களை தட்டிச் சென்ற சென்னை அழகிகள்! - Niranjana won first place

By

Published : May 2, 2023, 11:08 PM IST

Miss Koovagam 2023:விழுப்புரம்:உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் (Miss Koovagam at Koothandavar temple) ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கூத்தாண்டர் கோயிலில் சாகை வார்த்தல் நிகழ்வு கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. 

கூத்தாண்டர் கோயிலின் முக்கிய நிகழ்வான 'தாலி கட்டும் நிகழ்வு' இன்று (மே.2) நடந்தது. கூவாகம் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்டப் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்திற்கு வந்துள்ளனர். திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் மிஸ் கூவாகம் போட்டி விழுப்புரம் நகராட்சித் திடலில் நேற்று மாலை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்புச் சார்பில் இந்தாண்டுக்கான மிஸ் கூவாகம் 2023 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று (மே.2) நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நேற்று காலை நடைபெற்ற முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றிபெற்ற 15 அழகிகள் பங்கேற்றனர். இதில் நடை, உடை, பாவனை போன்றவற்றில் சிறந்து விளங்கிய சென்னையைச் சேர்ந்த 'நிரஞ்சனா' முதலிடத்தையும், 'நிஷா' இரண்டாம் இடத்தையும், சேலத்தைச் சேர்ந்த 'சாதனா' மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர். நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி அதிமுக ஆட்சியில் திருநங்கைகள் நலவாரியம் முடக்கப்பட்டிருந்ததாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் விரைவில் பரிசீலிக்கப்படும் எனவும், திருநங்கைகள் மாத ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.1500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

திருநங்கைகள் விரைவில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், எம்.பி.யாக வருவார்கள் என எதிர்பார்ப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டப் பலர் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details