தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் நேரு ஆய்வு

ETV Bharat / videos

சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு மெட்ரோ வாட்டர் வழங்கப்படும் - அமைச்சர் கே.என். நேரு - சென்னை பூந்தமல்லி

By

Published : Mar 19, 2023, 10:24 PM IST

பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் 580 மில்லியன் லிட்டர்  வரை கூடுதலாக குடிநீர் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரையிலான 21 கிலோமீட்டர் தூர அளவிற்கு ரூபாய் 43.75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2ஆம் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் 530 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தார். அந்த காலகட்டத்தில் குடிநீர் வழங்கல் வாரியம் மூலமாக இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதிலிருந்து சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அளவை 580 மில்லியன் லிட்டராக வழங்குவதற்காக ராட்சச குழாய்கள் பதிக்கும் பணி சென்னை கோயம்பேடு முதல் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் வரை அமைக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால் அந்த குழாய் அமைக்கும் பணி நேரடியாக எடுத்து வர முடியாது. 

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த பணி நடைபெறவில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 1.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புது குழாய் அமைப்பதற்காக ரூ.7.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைவில் முடிந்துவடைந்ததுடன் சென்னைக்கு 580 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க:தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்.. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000.?

ABOUT THE AUTHOR

...view details