தமிழ்நாடு

tamil nadu

வேலூர்

ETV Bharat / videos

"என் தாய், தந்தை, குழந்தைகளுக்கும் மேலாக காட்பாடி தொகுதியை நேசிக்கிறேன்" - அமைச்சர் துரைமுருகன்! - தாய் தந்தையைவிட காட்பாடியை அதிகம் நேசிக்கிறேன்

By

Published : Jul 23, 2023, 6:35 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதிக்குட்பட்ட திருவலம் பகுதியில் திமுக ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூலை 23) நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். 

இக்கூட்டத்தில் பேசிய அவர், "இன்றைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி அதிகம் மரியாதை கொடுப்பார். சென்னைக்கு பிரதமர் மோடி வந்தபோது, நான் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றேன். அப்போது, அவர் மூத்த அமைச்சர் நீங்கள் எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளீர்கள்? என்று கேட்டார். அப்போது, 13 முறை என்று கூறினேன், அவர் ஆச்சரியமடைந்தார். இந்த பெருமையை எனக்கு அளித்தது காட்பாடி தொகுதிதான். காட்பாடி தொகுதியை நான் என் தாயை விட, என் தந்தையை விட, நான் பெற்ற குழந்தைகளை விட அதிகமாக நேசிக்கிறேன். காரணம் காட்பாடி தொகுதியில் உள்ள அவ்வளவு பேரும் என் மீது அன்பாக உள்ளார்கள். எந்த ரூபத்திலும் கர்நாடகா அரசு மேகதாது அணையைக் கட்ட முடியாது. சட்டம் தெரியாமல் பேசுகிறார்கள். நான் அந்த இலாகாவில் காவிரி பிரச்னையில் 28 வருடங்களுக்கும் மேல் போராடிய ஆள். காவிரி பிரச்னையில் ஒவ்வொன்றும் எனக்குத் தெரியும்" என்று கூறினார்.  

இதையும் படிங்க: மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை தமிழகத்திற்கு பயிற்சி எடுக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details