தமிழ்நாடு

tamil nadu

கோயம்புத்தூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

ETV Bharat / videos

கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி; முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு உட்பட 18 ஆயிரம் பேர் பங்கேற்பு! - todays news in tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 5:17 PM IST

கோயம்புத்தூர்:புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக இன்று (டிச.17) நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவையில் ஆண்டு தோறும் மிகப்பெரிய அளவில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் புற்று நோயாளிகளுக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மேற்கு மண்டல டிஐஜி சரவண சுந்தர் ஆகியோர் கொடி அசைத்துத் துவக்கி வைத்தனர்.

கோவை வ.உ.சி மைதானம் அருகே துவங்கிய போட்டியில் 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details