தைப்பூசம் நிறைவு; பழனி முருகன் கோயிலில் ஆடிப்பாடி பக்தர்கள் சாமி தரிசனம்! - at Palani Murugan Temple
திண்டுக்கல்: பழனியில் தைப்பூசத் திருவிழா, கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவின் கடைசி நாளான நேற்றுடன் (பிப்.7) தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது. இந்நிலையில், தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 4ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை தெப்பத்தேர் பவனி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்றிரவு கொடியிறக்கத்துடன் தைப்பூசத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுவதையொட்டி பழனி முருகன் கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பாடி, கும்மியடித்த பக்தர்கள் காவடிகள் சுமந்து கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர்.