தமிழ்நாடு

tamil nadu

பாப்பாரப்பட்டி அரசு மதுபான கடை பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி

ETV Bharat / videos

பாப்பாரப்பட்டி அரசு மதுபானக்கடை பீர் பாட்டிலில் பல்லி இருந்ததால் அதிர்ச்சி! - Dharmapuri News

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 7:35 PM IST

தருமபுரி: பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு மதுபானக்கடை ஒன்றில் வாங்கிய பீர் பாட்டிலில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர்கள், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையில், நேற்று நண்பர்கள் மூவர் சேர்ந்து 12 பீர் பாட்டில்களை வாங்கியுள்ளனர். பின் அதனை எடுத்துச் சென்று வாகனத்தில் வைக்கும்போது, அதில் ஒரு பீர் பாட்டிலில் மட்டும் அளவு குறைவாக இருந்துள்ளதைக் கண்ட அவர்கள், பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அரசு மதுபான ஊழியரிடம் அது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். 

அப்போது அந்த பீர் பாட்டிலை மேல் நோக்கி தூக்கி பார்க்கையில், அதன் உள்ளே அழுகிய நிலையில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மதுபானக்கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அரசு மதுபானக்கடை சற்று நேரம் மூடப்பட்டது. பின்னர், இது குறித்து செய்தி அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல் நிலைய போலீசார், அந்த நபர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இருப்பினும், பல்லி இருந்த பீர் பாட்டிலை திரும்பப் பெறாமலேயே அரசு மதுபானக்கடை ஊழியர்கள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும், கடந்த வருடமும் இதே போன்று காலாவதியான பீர் பாட்டில், இந்த அரசு மதுபானக் கடையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details