Video: திருக்குறள் விழிப்புணர்வு ஏற்படுத்த 133 முறை வீதியில் விழுந்து வணங்கிய இளைஞர் - ராஜ வீதி
தஞ்சாவூர்: திருவாரூரை சேர்ந்தவர் குறள்மகன்(20). திரு.வி.க அரசு கலை கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்று முடித்துள்ள இவர் திருக்குறள் மீது கொண்ட பற்றினால் 1330 திருக்குறளையும் கற்று பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். மேலும் பொதுமக்களிடையே திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் நான்கு ராஜ வீதிகளிலும் தனது குடும்பத்தினருடன் வலம் வந்து 133 முறை தரையில் விழுந்து வணங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST