கொசவபட்டியில் விஜயகாந்த் மறைவிற்கு மொட்டை அடித்து, பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்திய தேமுதிக நிர்வாகிகள்.. - DMDK MEMBERS
Published : Dec 29, 2023, 10:33 PM IST
திண்டுக்கல்:தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிச.28) உயிரிழந்தார். அவரது உடல் தீவுக்கடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், தீவுக்கடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
அங்கு குடும்பத்தினர், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஜான் கென்னடி, வீரக்குமார் ஆகியோர் தலைமையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உருவ படத்தை வைத்து பாடை கட்டி இறுதி ஊர்வலம் சென்றனர். அதற்கு முன்னதாக தேமுதிக நிர்வாகிகள் மொட்டை அடித்து மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் தேமுதிக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.