தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை கோயிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தரிசனம்

ETV Bharat / videos

திருவண்ணாமலை கோயிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சிறப்பு பூஜை! - Thiruvannamalai news

By

Published : May 13, 2023, 7:08 AM IST

திருவண்ணாமலை:பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று (மே 12), தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கடந்த 10ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த தேர்தலில் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அம்மாநிலத்தின் கனகாபுரா தொகுதியில் டி.கே.சிவகுமார் போட்டியிட்டார். இதனால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என டி.கே.சிவகுமார் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

மேலும், இன்று காலை 8 மணி முதல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 224 தொகுதிகளைக் கர்நாடகாவில், மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா வரதா காந்தி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதேநேரம், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் என மும்முனை போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.  

ABOUT THE AUTHOR

...view details