தமிழ்நாடு

tamil nadu

உதயநிதியை வரவேற்க கரகாட்டம்

ETV Bharat / videos

உதயநிதியை வரவேற்க கரகாட்டம் - குத்தாட்டம் போட்ட திமுககாரர்கள்! - திமுக கட்சி விழாவில் கரகாட்டம்

By

Published : Jul 17, 2023, 8:55 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 17) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். ஜோலார்பேட்டை அருகேவுள்ள மண்டலவாடி பகுதியில் உள்ள மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவின் மேடைக்கு அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக திரளான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் விழா மேடைக்கு அருகிலேயே அரைகுறை ஆடைகளுடன் கரகாட்ட நடன கச்சேரியும் நடைபெற்றது.

இந்த நடன கச்சேரியைக் காண்பதற்காக அந்த இடத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, கரகாட்டத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். மேலும், தமிழ்நாடு அரசு இத்தகைய நடனங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் அமைச்சர் அரசு விழாவில் பங்கேற்க வரும் போது அரை குறை ஆடைகளுடன் நடனம் ஆடுவது முகச்சுளிப்பை ஏற்படுத்தும்விதமாக இருந்ததாக அங்கிருந்த பெண்கள் முனுமுனுத்தனர்.

இதையும் படிங்க:Kanyakumari Dog Show: 300-க்கும் மேற்பட்ட நாய்கள்..களைகட்டிய குமரி நாய்கள் கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details