ஜெயலலிதா மரண விசாரணை தாமதம் ஏன்?... அடுக்கடுக்கான பதில்கள் அளித்த நீதிபதி ஆறுமுகசாமி - உச்சநீதிமன்றம்
ஜெயலலிதா மரண குறித்த விசாரிப்பது ஏன் தாமதம் ஏற்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை இரண்டு பிரிவுகளாக மேற்கொண்டோம், முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன், இரண்டாவது மருத்துவமனையில் சிகிச்சை ஆரம்பித்ததிலிருந்து இறப்பு வரை பிரித்து விசாரணை நடத்தினோம். ஒவ்வொருவரின் சாட்சியமும் மிக முக்கியம் என்பதாலும் விசாரணை விரிவாக மேற்கொள்ள வேண்டி இருந்தது, சிலர் நேரில் ஆஜராகாமல் நீதிமன்றம் சென்றனர் அதுவும் தாமதம் ஏற்பட காரணம்.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொள்வதில் நீதிமன்றம் போலவே செயல்பட்டுள்ளது என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST