Bharathi raja talks about Gautham menon: "நான் கௌதம் மேனன் கண்களை ரசித்தேன், அவரது கண்கள் பேசும்" - இயக்குநர் பாரதிராஜா! - karumengangal kalaigindrana
Published : Aug 24, 2023, 3:45 PM IST
சென்னை: தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், தங்கர் பச்சான், ஆர்வி உதயகுமார் நடிகை அதிதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பாரதிராஜா "ஆடியோ வெளியீட்டு விழா என்பது ஒரு சடங்கு. எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. தங்கர் பச்சான் ஒரு சிறந்த எழுத்தாளர். இப்படத்தில் என்னை ரொம்ப மோல்ட் செய்தார். நான் பெண்களின் கண்களை மிகவும் ரசிப்பவன். அதற்கு பிறகு கௌதம் மேனன் கண்களை ரசித்தேன். அவரது கண்கள் பேசும். இப்படத்தில் நடித்த அனைவரும் தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
சில படங்கள் தான் வருடக் கணக்கில் பேசப்படும். இதுவொரு பெரிய இலக்கியம். இது சினிமாவில் நாகரீகமாக எடுக்கப்பட்ட படம். யோகிபாபுவின் நடிப்பும் பிரமாதம். இதனை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் கருமேகங்கள் கலைகின்றன" எனக் கூறினார்.