அண்ணாமலை, என்னை விமர்சிப்பது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை - அமைச்சர் கீதா ஜீவன் - தூத்துக்குடி மாவட்ட செய்தி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளகாடு ஊராட்சியில் உள்ள மகளிருக்கு வளம் தரும் வாழை நார் தொழிற்பயிற்சி மையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (மார்ச் 25) தொடங்கி வைத்தார். வாழை நார் மூலம் தயார் செய்யப்படும் பொருட்கள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் குறித்தும், அங்குள்ள பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், ”மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மகளிர்களின் விரும்பத்திற்கு இணங்க வாழை நார் தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழில் பயிற்சிக்காக 3 மிஷின்கள் நன்கொடையாக வாங்கப்பட்டுள்ளது.
இதில், முதல் கட்டமாக 60 பெண்களுக்கு 2 நாட்கள் வாழை நார் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மகளிரின் வாழ்வாதாரம் உயரும். இந்த வாழை நார் தொழிற்பயிற்சி மையமானது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது பற்றி ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. புரிந்துகொள்பவரிடம் சொல்லலாம் அவனிடம் எனக்கு என்ன பேச்சு என்று ஒருமையில் பேசி விட்டு சென்றார்.