தமிழ்நாடு

tamil nadu

இது எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு

ETV Bharat / videos

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கிய கலிபோர்னியா பயணி.. பாதுகாப்பாக அழைத்து வந்த ஹோட்டல் ஊழியர்கள்! - waterlogged street at Arumbakkam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 1:32 PM IST

சென்னை:சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும், சில பகுதிகளில் போக்குவரத்து இன்னும் சீர் செய்யப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் சாலைகளைக் கடக்க மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். 

பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவே படகுகளில் சென்று வரும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கலிபோர்னியாவைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். இந்த சூழலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால், அவர்கள் தங்கியிருந்த அரும்பாக்கம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

இதனால் தண்ணீரைக் கடக்க முடியாமல் தவித்த வெளிநாட்டவரை, அவர் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் தகரம் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளால் செய்யப்பட்ட படகு போன்ற ஒன்றில் அவரை அமர வைத்து, அவரது வாகனத்திற்கு பத்திரமாக தூக்கி வந்தனர்.  

இந்நிலையில் அவருடன் வந்திருந்த பெண் ஒருவர், இது எங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது எனவும், இது எங்கள் கிறிஸ்துமஸ் பரிசு, சென்னைக்கு நன்றி எனவும் கூறியிருந்தார். மேலும் தங்களுக்கு உதவியதற்காக அவர் நன்றி தெரிவித்தார். 

ABOUT THE AUTHOR

...view details