video:நீலகிரியில் கடும் உறைபனி...தட்டுகளில் இருந்த தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறியது - Ice cube of water on the plate
நீலகிரிஅடுத்து குன்னூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே புல்வெளிகளில் உறைபனி படர்ந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடும் உறைபனியின் காரணமாகத் தட்டில் வைத்த தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறியது. இது 1980களில் பனிப்பொழிவு காலங்களில் குழந்தைகள் இதேபோன்று தட்டுக்களிலும், டம்ளர்களில் தண்ணீரை வைத்து அதை ஐஸ் கட்டியாக மாறிய பின் எடுத்து விளையாடி வந்த வழக்கமான ஒன்றாகும். மேலும் இந்த தட்டில் வைத்திருக்கக் கூடிய நீரில் இருந்து வரும் ஐஸ் கட்டியை நூலில் கட்டி தொங்கவிட்டு எந்த ஐஸ்கட்டி மிக அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறது என சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்த நிகழ்வு தற்பொழுது நினைவில் வருவதாக உள்ளது.