கடும் பனிமூட்டம்; விவசாய பணிகள் பாதிப்பு - heavy fog
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி உள்ளிட்ட பல கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மஞ்சள் விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். இந்த பனிமூட்டம் காலை 9 மணி வரை இருப்பதால், வனவிலங்குகளின் நடமாட்டம் கூட தெரியாத நிலையில், பாதுகாப்பு கருதி பனி விலகிய பிறகே பணிகள் தொடங்குவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST