பழனி முருகன் கோயில் நவராத்திரி திருவிழா: 9 நாட்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு ரத்து! - temple administration
Published : Oct 10, 2023, 3:56 PM IST
திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. நவராத்திரி விழா இந்த மாதம் 15ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீது தினமும் நடைபெறக்கூடிய தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தங்கத் தேர் புறப்பாடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், 24ஆம் தேதி முதல் வழக்கம் போல தங்கத் தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் பழனிமலை மீது நடைபெறக்கூடிய தங்கத் தேர் புறப்பாடு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து முருகனை வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு வருமான வரித்துறை சம்மன்!