ஆதரவற்ற கர்ப்பிணியின் சடலத்தை தோளில் சுமந்துசென்று அடக்கம் செய்த போலீசார் - ஜார்கண்ட் போலீசார்
கோடா: ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் பிரசவத்தின் போது உயிரிழந்த பெண்ணை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராததை அடுத்து சடலத்தை போலீசார் தோளில் சுமந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபீனா மற்றும் சிசு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சபீனா குடும்பத்தோடு ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராததை அடுத்து சிசு மற்றும் பெண்ணின் சடலத்தை தோளில் சுமந்து சென்று போலீசார் அடக்கம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST