பழனியில் பேக்கரிக்குள் புகுந்து கடையை சூறையாடிய கும்பல் - சிசிடிவி வெளியீடு! - பேக்கரிக்குள் புகுந்து கடையை சூறையாடிய கும்பல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியாக இருக்கும் சாமி தியேட்டர் அருகில் உள்ள கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அம்சா என்பவர் கடந்து மூன்று நாட்களுக்கு முன் புதியதாக ‘டீ டைம் பேக்கரி’ என்ற பெயரில் பேக்கரியை திறந்துள்ளார். இந்நிலையில் சாமி தியேட்டர் பகுதியைச் சேர்ந்த சிலர் கடந்த மூன்று நாட்களாக பேக்கரிக்கு வந்து டீ, காபி குடிப்பதும் தின்பண்டங்களை எடுத்து கொண்டு ஓடிவிடுவதுமாக இருந்துள்ளனர்.
இதே போல் நேற்றிரவு ( மே 06 ) மதுபோதையில் புகுந்த நபர்கள் கடையில் இருந்த ஊழியரிடம் தங்களுக்கு பணம் தருமாறு கல்லா பெட்டிக்குள் கைவைத்து கேட்டுள்ளனர். எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என ஊழியர்கள் கேட்டதற்கு சாப்பிடும் உணவுப் பொருள் மேல் தூங்குவது போல் சாய்ந்த போதை ஆசாமியை கடைக்காரர் அவரை தலையை தள்ளி விடவே, கடையில் இருந்த சாப்பிடும் உணவுப் பொருட்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
பின்னர் கடையில் இருந்த ஊழியர்கள் அவரை வெளியேற்ற முயற்சிக்கும்போது குடிபோதை ஆசாமிகள் தாக்கியதில் கடைக்காரர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். இது குறித்து கடை உரிமையாளர் அம்சா கடையில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து பழனி நகர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்தவர்களின் பேக்கிரியில் குடிபோதையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:குமரியில் கேரள சிறுவன் மர்ம மரணம் - ஓராண்டுக்குப் பிறகு 14 வயது சிறுவன் கைது!