அண்ணாமலையையே திக்குமுக்காடச் செய்த சிவகங்கை பாஜக தொண்டர்கள்! - BJP
சிவகங்கை அரண்மனைவாசல் அருகே பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு நரேந்திர மோடியின் சாதனைகளையும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் திமுக ஆட்சியை விமர்சித்துப்பேசினார். அதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திப்பதற்காக மேடையில் ஏறிய ஏராளமான தொண்டர்கள் அண்ணாமலையையே திக்குமுக்காட வைத்துவிட்டனர். ஒருவரை ஒருவர் முந்தி அடித்துக்கொண்டும் செல் போனில் செல்ஃபி எடுப்பதற்கும் சால்வை அணிவிப்பதற்கும் என ஏராளமானோர் மேடையில் ஏறியதால் ஒரு புறத்திலிருந்து பாஜக நிர்வாகிகள் மேடையில் யாரும் ஏற வேண்டாம் எனவும்; மேடையில் ஏறி அவர்களை கீழே பிடித்து இழுத்து விட்ட சம்பவமும் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சீதா பழனிச்சாமி மேடையிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST