தமிழ்நாடு

tamil nadu

சாலை விபத்தில் உயிரிழந்த ஒன்றிய செயலாளருக்கு அதிமுகவினர் அஞ்சலி

ETV Bharat / videos

சாலை விபத்தில் உயிரிழந்த ஒன்றிய செயலாளர்.. விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி! - புதுக்கோட்டை அன்னவாசல்

By

Published : Aug 19, 2023, 2:12 PM IST

புதுக்கோட்டை:அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது பலத்தை நிரூபிக்கும் வண்ணம், மதுரையில் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் நாளை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைத்த திட்டமிட்டு உள்ளார்.

அந்த வகையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் செய்து வரும் நிலையில், பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த அதிமுக மாநாட்டிற்கு தொண்டர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

எனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், மாநாட்டிற்கு முன்னதாக மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். அவ்வாறு மாநாட்டு பணிகளை பார்வையிட்டட சென்றிருந்த புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் (வயது 70) முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு திரும்பிய போது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த சாம்பசிவத்தின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details