தமிழ்நாடு

tamil nadu

உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

ETV Bharat / videos

பிரபல தனியார் உணவக சாம்பார் இட்லியில் மிதந்த புழு - உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 8:00 AM IST

திருவண்ணாமலை: வேங்கிக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது, பிரபல தனியார் உணவகம். இந்த உணவகத்தில் நேற்றைய முன்தினம் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த 2 நபர்கள் இரவு உணவு உண்பதற்காகச் சென்றுள்ளனர்.

பின்னர், அந்த ஹோட்டலில் அமர்ந்து சாம்பார் இட்லி 2 ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆர்டரின் பெயரில் ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட சாம்பார் இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபொழுது, சாம்பாரில் இருந்து வெளியே வந்த புழுவைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து, ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், உணவக ஊழியர்கள் உரிய பதிலளிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில் மற்றும் செய்யார் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் ஆகிய இருவரும் வேங்கிக்கால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

உணவகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள உணவுப் பொருட்களின் தரம், முறையாக உணவு சமைக்கின்றனரா என்ற பல்வேறு கோணங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும், நேற்றைய முன்தினம் இளைஞர்கள் வாங்கிய சம்பார் இட்லியில் எவ்வாறு புழு வந்தது என உணவக ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளதாகவும், அதற்கு உரிய பதிலை உணவக நிர்வாகம் அளிக்க வேண்டும் வேண்டுமென்று உணவக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் தெரிவித்ததுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details