தமிழ்நாடு

tamil nadu

நீலகிரியில் நாவல் பழத்துக்கு படையெடுக்கும் கரடிகள்

ETV Bharat / videos

நீலகிரியில் நாவல் பழத்துக்கு படையெடுக்கும் கரடிகள்:நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தல்

By

Published : Aug 1, 2023, 4:45 PM IST

நீலகிரி:குன்னூர்,கோத்தகிரி, பகுதிகளில் உள்ள கிராமங்களில் தேயிலைத் தோட்டங்களில் ஊடுபயிராக நாவல் பழ மரங்கள் உள்ளன. தற்போது இந்த மரங்களில் நாவல்பழங்கள் அதிகளவில் காய்க்கத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களைத் தேடி, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே வரத் துவங்கி உள்ளன. 

குறிப்பாக குன்னூர் அருகே உள்ள கோடேரி கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், ஒரே நேரத்தில் ஐந்து பெரிய கரடிகள் நுழைந்து, அங்குள்ள நாவல் பழங்களிலிருந்து கீழே விழுந்த பழங்களைச் சாப்பிட்டுச் சென்றது. நாவல் பழங்களைத் தேடி வரும் கரடிகள் பொது மக்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு மிகவும் அருகில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடிகளைக் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் மனோகரன் தெரிவிக்கையில், “ஜகதலா பேரூராட்சி குப்பைக்கழிவுகள், உலிக்கல் பேரூராட்சி குப்பைக் கழிவுகள் மற்றும் கேத்தி பேருராட்சி குப்பைக் கழிவுகள் இப்பகுதியில் சேமிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

இதன் காரணமாகவே கரடிகள் கூட்டமாக இப்பகுதிக்கு வருகின்றன. இதனால் மனித விலங்கு மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இங்குள்ள உரம் தயாரிக்கும் மையத்தின் சுற்றுச்சுவரின் உயரத்தை உயர்த்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details