தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் மீண்டும் களைக்கட்ட துவங்கிய மீன் பிடி திருவிழா!

ETV Bharat / videos

அடேங்கப்பா எவ்வளவு பெருசு.. புதுக்கோட்டையில் களைகட்டிய மீன் பிடி திருவிழா!

By

Published : Apr 1, 2023, 1:33 PM IST

புதுக்கோட்டை:அன்னவாசல் அருகே உள்ள புதூர் கிராமத்தில் உள்ள பெரிய மற்றும் சின்ன கண்மாயில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களைப் பிடித்து வருகின்றன. பெரும்பாலான நீர் நிலைகளை ஒட்டிய கிராமங்களில், மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும், விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் தங்கள் கிராமங்களை ஒட்டி உள்ள கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளில் மீன்களைப் பிடிக்கச் செல்கின்றனர். மேலும், இந்த மீன் பிடி திருவிழாவை நடத்தா விட்டால் வறட்சி ஏற்படும் என்றும் மக்கள் நம்புவதால் இந்த நிகழ்வு காலம் காலமாகத் திருவிழா போன்று நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ அதே அளவு மீன்பிடித்து திருவிழாவிற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திருவிழாவில் ஜாதி மத பேதம் உள்ளிட்ட எதையும் பாராமல் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துல் கொண்டு மீன்களைப் பிடித்தனர். 

மேலும், மீன்களைப் பிடிக்கக் கச்சா கூடை உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, நாட்டு வகை மீன்களான கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் பிடிக்கு மீன்களை யாரும் விற்க மாட்டார்கள். அதேபோல், அனைவரும் பிடித்த மீனை வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது மீன்பிடி திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், தற்போது அன்னவாசல் பகுதிகளில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் உற்சாகத்துடன் மீன்களைப் பிடித்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு குடும்பத்தினரும் தல 25 கிலோவிற்கும் மேலாக மீன்களைப் பிடித்துச் சென்றதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க:'கடைசி விவசாயி' இயக்குநருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

ABOUT THE AUTHOR

...view details