தமிழ்நாடு

tamil nadu

தூண்டில் பாலம் அமைக்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!!

By

Published : Mar 13, 2023, 5:08 PM IST

ETV Bharat / videos

தூண்டில் பாலம் அமைக்க கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!!

நெல்லை: கூடுதாழையில் கடல் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக மீனவர்களின் வீடுகள் உள்ளிழுத்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் படகுகள் அனைத்தும் கடலுக்குள் இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், வலைகள், என அனைத்தும் சேதம் அடைந்து வருகிறது. இதற்குத் தீர்வு காணும் விதமாக உடனடியாக அரசு தூண்டில் பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேற்று சபாநாயகர் அப்பாவு கடல் அரிப்பு ஏற்பட்ட சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அமைச்சர் வந்து பேசி பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னரும் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் ஆண்கள் மற்றும் பெண்கள் படகில் கருப்பு கொடி கட்டி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் கருப்பு கொடி கட்டிய படகில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் மேலும் உடனடியாக தூண்டில் பாலம் அமைத்துத் தர வேண்டும் இல்லை எனில் தூண்டில் பாலம் அமையும் வரை அரசுக்குத் தொடர் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் நடைபெறும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ’ஏலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்னு நிருபிச்சட’ - ஜிபி முத்து பாணியில் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details