தமிழ்நாடு

tamil nadu

தீயணைப்பு துறையினர்

ETV Bharat / videos

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆடு.. சாதுர்யமாக மீட்ட தீயணைப்பு துறையினர்..! - tn fire department

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 11:02 PM IST

தூத்துக்குடி:சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஞானராஜ். இவர் ஆடு, மாடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய ஆடுகளை வழக்கம் போல் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றுள்ளார். அப்போது ஒரு ஆடு மட்டும் காணவில்லை. அதைக் காட்டுப்பகுதியில் தேடிய போது அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் ஆடு சிக்கியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆட்டை மீட்கும் முயற்சியில்  ஞானராஜ் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவரால் மீட்க முடியவில்லை. 

இதனையடுத்து, சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த மாரியப்பன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர். ஆழ்துளை கிணற்றில் உள்ளே கயிற்றைக் கட்டி ஆட்டை மீட்க முயன்றுள்ளனர். அது தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு வீரர் துரை சிங்கம் என்பவர் இடுப்பு மற்றும் கால்களில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, மற்ற வீரர்கள் உதவியுடன் தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் இறங்கி ஆட்டை பாத்திரமாக மீட்டனர். தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து ஆழ்துளை கிணற்றில் இருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரருக்கு அந்தப் பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details