தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் கடும் துர்நாற்றம் - விவசாயிகள் கவலை - கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து தென்பெண்ணை ஆற்றின் மூலம் விநாடிக்கு 473 கனஅடி நீர் வரத்தாக உள்ளது. கெலவரப்பள்ளி அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 42.64 அடிகள் நீர் சேமிக்கப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் 410 கனஅடி நீரில் அதிகப்படியான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Chandrayaan-3: செப்டம்பரில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்... இஸ்ரோ துணை இயக்குநர் தகவல்!
இந்த ரசாயன கழிவினால் கெலவரப்பள்ளி அணையில் துர்நாற்றம் வீசி வருவதாகவும், கரு நிறத்தில் செல்லும் நீரில் குவியல் குவியலாக பனிக்கட்டிகளைப் போன்று நுரை அதிக அளவில் காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கெலவரப்பள்ளி அணைப்பகுதி முழுவதும் ரசாயனக் கழிவின் துர்நாற்றம் காரணமாக நுரைக் காற்றில் பறந்து ஆற்றில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 இடங்களில் சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்து.. முக்கிய ரயில்கள் சேவை ரத்து!