Nilgiris Wild Elephants: சேற்று நீரில் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்த யானைகள்!! - யானைகள் குளியல்
நீலகிரி:கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வளங்கள் சூழ்ந்துள்ளதால் வனங்களில் கரடி, காட்டெருமை, சிறுத்தை புலி உள்ளிட்ட அரிய வகை வன விலங்குகளும் வாழ்ந்து வருகின்றது. குறிப்பாக யானைகள் அதிக அளவில் உள்ளதால் தேயிலை தோட்டங்களிலும் வனப்பகுதிகளிலும் கூட்டமாக வலம் வருகின்றனர்.
இந்த யானைகள் அவ்வப் போது சிறு சிறு சேட்டைகள் செய்வது வழக்கம். இது போன்று யானைகள் செய்யும் சேடைகள் காட்சிபடுத்தப்படாமல் இருக்கும். பந்தலூர் பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானைகள் வெப்பம் தாங்க முடியாமல் சிறிய மண் குளத்தில் தேங்கி இருந்த நீரில் இறங்கி விளையாடியது.
பின்பு சேற்றுடன் கூடிய தண்ணீரை தன் மீது இறைத்து சேற்று குளியல் போட்டது. பெரிய யானையுடன் குட்டி யானையும் நீண்ட நேரமாக சேற்றில் விளையாடி ஒன்றன் பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றது. பொதுவாக யானைகள் இது போன்று நீர் நிலைகளை கண்டால் குஷியாக விளையாடும். அது போல் சேற்று நீரை கண்டவுடன் யானைகள் உற்சாகமாக குளியலிட்ட வீடியோ காட்சிகளை வாகன ஓட்டிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.