தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

ஸ்ஷப்பா.. என்னா வெயிலு! ஏரியில் லூட்டி அடித்த யானைகள் - யானைகள் குளித்த வீடியோ

By

Published : Feb 8, 2023, 4:51 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்னூர் ஏரியில் நேற்று (பிப்.7) இடம்பெயர்ந்து வந்த மூன்று காட்டு யானைகள் ஆனந்த குளியல் போட்டன. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை தளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த யானைகள் ஓசூர் அருகே மத்திகிரி அரசு கால்நடைப் பண்ணையில் வந்து தஞ்சம் அடைந்து முகாமிட்டிருந்தன. அவற்றை கண்காணித்து வந்த வனத்துறையினர் நேற்று அதிகாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு முகாமிட்டிருந்த ஐந்து யானைகள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினரால் விரட்டி அடிக்கப்பட்டன. இந்த நிலையில் அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட யானை கூட்டத்திலிருந்து பிரிந்த மூன்று யானைகள் மீண்டும் அங்கிருந்து இடம்பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள கர்னூர் ஏரியில் தஞ்சமடைந்ததோடு அங்கு ஆனந்த குளியல் போட்டு வருகின்றன. 

இதனைக் கண்ட அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில், அங்கு விரைந்த வனத்துறையினர் அவற்றை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் யாரும் யானைகள் உள்ள ஏரி பகுதிக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். ஆயினும், யானைகள் குளியல் போடுவதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details