சமயபுரம் மாரியம்மன் கோயில் 18 நாட்கள் உண்டியல் காணிக்கை: எவ்வளவு தெரியுமா? - Eighteen days of undiyal counting
திருச்சி: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்று, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அப்போது பக்தர்கள் கோயில் உண்டியலில் கடந்த 18 நாட்களில் செலுத்திய காணிக்கைகளை நேற்று எண்ணியதில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரத்து 459 ரொக்கமும், 3 கிலோ 181 கிராம் தங்கமும், 4 கிலோ 730 கிராம் வெள்ளியும், 206 அயல்நாட்டு நோட்டுகளும் உள்ளதாக கோயிலின் இணை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.