கடையநல்லூர் முன்னாள் நகராட்சி ஆணையர் வீடு, நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! - tenkasi news
Published : Jan 5, 2024, 10:28 AM IST
தென்காசி: கடையநல்லூர் நகராட்சியின் முன்னாள் ஆணையாளராக இருந்த பவுன்ராஜ் என்பவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது தாயார் வீடு உள்ளிட்டவைகளிலும், தென்காசி நகர பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான ஜே.எஸ்.ஆர் கார்மெண்ட்ஸ் என்கின்ற நிறுவனத்திலும் தற்போது மூன்று மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருங்கிணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் லஞ்சம் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பவுன்ராஜ் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததற்காக ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து தீவிர தணிக்கையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் குறிப்பிட்ட சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தொடர் சோதனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேரிகார்டை அகற்றிய விசிக நிர்வாகிகள்; போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!