தொடர் மழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணையின் கழுகுப்பார்வை காட்சி! - நிரம்பி வடியும் வரதமாநதி அணை
Published : Nov 21, 2023, 10:17 AM IST
திண்டுக்கல்: மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில், பழனி-கொடைக்கானல் இடையேயான சாலையில் உள்ள வரதமாநதி அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேறும் ரம்மியமான கழுகுப் பார்வை காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பாலாறு-பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை, வரதமாநதி அணை என மூன்று அணைகள் உள்ளன. பருவமழை காலத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பிய நிலையில் உள்ளன.
அந்த வகையில், பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, பழனி-கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வரதமாநதி அணையின் முழு கொள்ளளவான 65 அடியை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுகின்றன. இது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, அணையில் இருந்து, உபரி நீர் வடிந்து ஓடும் ரம்மியமான கழுகுப் பார்வைக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.