நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு! கண்கவர் கழுகு பார்வை! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
Published : Nov 23, 2023, 7:18 PM IST
கோயம்புத்தூர்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தை ஒட்டிய கடற்கடை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37 சென்டிமீட்டர் மழை பதிவானது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை ட்ரோன் கேமரா மூலம் பிரத்தியமாக மாவட்ட நிர்வாகம் படம்பிடித்துள்ளது. தற்போது அந்த காட்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அழகு கொஞ்சம் சித்திரை சாவடி பகுதியில் ஆர்பரித்துச் செல்லும் நொய்யல் ஆற்ரின் ரம்யமான காட்சி வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.