தமிழ்நாடு

tamil nadu

தென்காசி அருகே பத்தாம் நூற்றண்டு வட்ட எழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ETV Bharat / videos

தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! - tenkasi seithikal

By

Published : May 29, 2023, 7:16 PM IST

தென்காசி:தென்காசி நகரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புலியூர் குளம். இந்தக் குளத்தில் மழை நேரத்தில் தண்ணீர் நிரம்பி அந்த பகுதியில் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால், அந்த குளத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து, குளத்தின் மதவிற்கு அருகே ஒரு வட்டெழுத்து கல்வெட்டு வெளியே தென்பட்டது. 

இதனை தொல்லியல் ஆய்வாளர்களான நாராயணமூர்த்தி, தென்பொதிகை குடும்பன், கோபால் குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வு செய்ததில், அந்த வட்ட எழுத்து கல்வெட்டு கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கல்வெட்டு, பாண்டிய பேரரசர் மூன்றாம் நரசிம்ம பாண்டியரின் 14-ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி 914 -ல் பொறிக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. தென்வார நாட்டுக் கிழவன் இதனை அமைத்துள்ளார். மொத்தம் 8 வரிகளில் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேளாண்மைக்காக ஏரி குளங்கள் வெட்டுவதும் நீர் மேலாண்மைக்காக அதில் தூம்பு அமைத்து அது பற்றிய செய்திகளை கல்லில் பதிப்பதும் பண்டைய காலத்தில், தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதையொட்டி தான் இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது என இதில் பதிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் கூறுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனை எட்டிமாறன் என்பவர் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கல்வெட்டு குளக்கரை மதகில் இருந்து 75-அடி தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 75 செ.மீ இடைவெளி உள்ள குமுளி தூண்கள் இரண்டும், ஐந்து அடி அகலம் கொண்ட மதகு காலும், கரை மதகை இணைக்கின்றன. இதனை அவ்வழியை செல்லும் பெரும்பாலான மக்கள் கண்காட்சி போல பார்த்து செல்கின்றனர்.

இதையும் படிங்க:Ooty Fruit Show: கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சி.. குன்னூரில் பழக்கண்காட்சி பரிசளிப்புடன் நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details